சீருடைப்பு

ரெட்டை ஜடை
வெள்ளை ரிப்பன்
வெள்ளிக்கிழமை மட்டும் பூ

கட்டங்களுடன் சட்டை
குட்டைப் பாவாடை
கருப்பு ஷூ

உடன்

வெள்ளை சாக்ஸ்க்குள்
ஒளிந்தவாறு
வெளியே தெரியாமல்
கான்வென்ட் போகிறது
புதுக் கொலுசொன்றும்...

- Unknown

Category: 0 comments

0 comments:

Post a Comment