அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
மனதி லுறுதி வேண்டும்,வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்; மண் பயனுற வேண்டும்,வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்.
-- பாரதி
0 comments:
Post a Comment