விடியலில் விழி திறந்தால் சூரிய ஒளியாய் என்னை சுடுகிறாய்
விடிந்தும் விடியாத நேரங்களில் பனியாய் என்னை படர்கிறாய்
உன்னை சுற்றிய ஒவ்வொரு நொடியும் இன்று எனக்கு பின்னால் தவழ்கிறது
உன்னை வருடிய தென்றல் கூட இன்று புயலாய் என்னை சாய்க்கிறது
உந்தன் வாசம் தேடித்தேடி என் தோட்ட பூக்கள் புதைந்தது
உன் பார்வை பட்ட உயிரெல்லாம் இன்று துடியாய் துடித்து மடிந்தது
பாதி தூக்கத்தில் பாவை முகம் என்னை பாடாய் படுத்தியது
மீதம் உள்ள இரவெல்லாம் உன் மடி சேர என்னை கடத்தியது
நீ இங்கில்லாததை உணரவே இன்னும் ஏழு பிறப்பு போதாது
நீ எனக்கில்லை என்பதை உணர எத்தனை பிறப்பு வேண்டுமோ....?!
0 comments:
Post a Comment