பெருக்கி துடைத்த கட்டுத்தாரை
மாட்டுச் சாணத்தால் தெப்பகுளம்,
நிரைந்த குளத்தில் சிறு நவதானியம்
கரைமேல் ஒரு சாணி பிள்ளையார் அருகில் ஒரு மஞ்சள் பிள்ளையார்
மாடு கழுவ வைக்கோல்
கொம்புக்கு சாயம் அடிக்க காவி, மகுடமாய் குஞ்சம் வைத்த கையறு
அழகான முன் நெற்றியில், சித்தநாதன் திருநீர்
வட்டமாய் சந்தன போட்டு அதன்மேல் குங்குமம்
புத்தம் புதிதாய் மண் பானை
கறந்து வைத்த மாட்டுப்பால்
தும்பை பூவாய் பச்சரிசி
சுற்றிக்கட்ட கொத்து மஞ்சள்
நீண்டு வளர்ந்த செங்கரும்பு
தலை வனங்கிய நெற்கதிர்
அடுப்பு தணலில் சாம்பிராணி
ஒரு ரூபாய் வில்லை சூடம்
அகல தட்டில் தீபாராதனை
வடக்கில் பொங்கினால் வளமென,
பானையை வடக்கில் சாய்த்து வைக்கும் அம்மா
இடுப்பில் துண்டு கட்டி பணிவோடு பூஜை செய்யும் அப்பா!
- ஜெகதீசன் கந்தசாமி

0 comments:
Post a Comment